நம்முடைய முன்னேற்றத்திற்கு வானம் கூட எல்லையில்லை!
வானமே எல்லை என்ற கல்வி மற்றும் சுயமுன்னேற்ற இயக்கம் 1992ல் துவக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் ஒரு அங்கமாக 2004 ஆம் ஆண்டு ‘வானமே எல்லை’ என்ற பத்திரிக்கையைத் துவக்கினோம். இந்த பத்திரிக்கை காஞ்சி காமகோடி பீடம் சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் நீதியரசர் கற்பகவினாயகம் அவர்கள் முன்னிலையில் துவங்கப் பட்டது.
அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் குறிக்கோள். பெற்றோர்களும் கல்வியாளர்களும்கூட அதைத்தான் விரும்புகிறார்கள். மற்ற அனைவரும்கூட வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் பலருக்கு சரியான வழிமுறைதான் தெரியவில்லை.
நம்முடைய முன்னேற்றத்திற்கு வானம்கூட எல்லையில்லை, நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும்தான் எல்லை என்ற கருத்தை மையமாகக் கொண்டு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நிறுவனங்களில் பணி செய்பவர்கள் என்ற பலதரப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது எப்படி என்பது பற்றிய பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம்.
வானமே எல்லை தமிழ் மாத இதழ் கல்வி மற்றும் சுய முன்னேற்றம் சம்பந்தப்பட்ட பல கருத்துக்களை கட்டுரை மூலமாகவும் கதைகள் மற்றும் துணுக்குகள் மூலமாகவும் பல இல்லங்களுக்கும் பள்ளிகளுக்கும் மாதம்தோரும் கொண்டு சேர்க்கிறது.
சுயமுன்னேற்றம், பெற்றோர் கல்வி, விளையாட்டு, இளம்வயதில் சாதனைகள், வாழ்க்கையில் சோதனைகளைச் சாதனைகளாக எதிர்கொள்ளுதல் போன்ற மிக முக்கியமான பகுதிகளைப் பற்றி சிறந்த அனுபவம் மிக்க எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் வானமே எல்லை பத்திரிக்கையில் எழுதி வருகிறார்கள்.
இந்த பத்திரிக்கை துவங்கிய நாள் முதலிருந்து பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி மாத இதழின் ஆசியர் கலைமாமணி முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கௌரவ ஆலோசகராக இருந்து இந்த பத்திரிக்கையை சிறப்போடு நடத்தி வருகிறார்.
இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன் ஒரு கல்வியாளர், வழக்குரைஞர் மற்றும் சட்ட ஆலோசகர். அவரும் அவருடைய துணைவியார் திருமதி ராதா ஸ்ரீதரன் அவர்களும் வெளிநாடுகள் பல சென்று கல்வி மற்றும் சுயமுன்னேற்றம் பற்றி பயிற்சி பெற்று பல புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்கள்.
ஆசிரியர் குழு:
ஆசிரியர்:
திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன்
ஆசிரியர் குழு :
என்.சி.கல்யாணி
ராதா ஸ்ரீதரன்
கௌரவ ஆலோசகர்
திருப்பூர் கிருஷ்ணன்
பதிப்பாளர்:
வானமே எல்லை